முள்ளில்லா ரோஜா
முள்ளில்லா ரோஜா
பாரதிதாசன் போட்டியாளர்
முள்ளில்லா ரோஜா முகவரியைத் தேடுதல்போல்
கள்ளமில்லா நெஞ்சம் கருனையினைத் தேடிடுமே .
பள்ளியறை வாசலில் பாலகனோ புத்தகச் சுமையோடு
அள்ளியள்ளி அழகாக அடுக்கி வைத்துச் செல்கின்றான் .
கடைத்தெருவில் சென்றாலோ கலப்படமே நிலையாக
விடைதருவார் வீணர்கள் விந்தையான உலகத்திலே .
மடைதிரண்ட வெள்ளமென மனுநீதி சொல்வதற்கு
தடைகளையும் தாண்டித் தாபிப்போம் நன்னெறியை !
இனத்தை நாம் பெருக்குகின்றோம் இம்மியிடம் இனியில்லை
வனமெல்லாம் வீடாச்சு . விலங்குகளும் வீழ்ந்தனவே .
கழனிகளும் காடுகளும் மேடுகளும் காணவில்லை .
மலர்களுக்கு முள்ளிருந்தால் மணத்திற்குக் காப்பாகும் !
மங்கையரைப் போல்தானே மலர்களுமே காசினியில்
அங்கெங்கே முள்ளிருந்தால் ஆபத்தை எதிர்கொள்வர் .
சிங்கமெனச் சீறிப்பாய சிங்கார ரோஜாவே
தன்னுடைமை ஆக்கிக்கொள் தற்கால வெற்றிகளை .
தற்காத்து தன் சந்ததி காத்திடவே வேண்டுமே முட்களுமே
கற்றாரும் நாவினையும் காத்திடல் வேண்டுமே நாளும்
சொற்காத்தல் சுவைக்கும் சோலையில் அழகான
நற்காதல் நிறைவேற யாசிப்பாய் முட்களையும் ரோஜாவே !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்