அனிதா நீ கருகிப் போக எமனாக வந்தது நீட் தேர்வு

நீ கருத்த குழந்தையாய் ஏன் பிறந்தாய் ??
நீ கருத்தாய் படிக்கும் மகளாய் ஏன் வளர்ந்தாய் ??
நீ கற்பதை கடமையாய் எண்ணியதாலோ,,
இன்று
நீ கயிற்றால் கழுத்தை சுருக்கவிட்டாய்
நீ கருவாய் வளர்த்த மருத்துவ கனவு
நீ கருகிப்போக எமனாக வந்தது நீட் தேர்வால்
நீ கருகலைந்த தாயின் வலியை போன்று உணர்ந்தாயோ என்னவோ ??
நீ கரைந்து போனாய் உன் கனவை கருவாய் விதைத்துவிட்டு
நீ நீட் விலக்கிற்க்காக நீதி கேட்டு நீதி மன்றம் சென்றாய்
நீ நீதிகெட்ட அதிகார கரைவேட்டி கயவர்களால் நீர்த்துபோனாய் !!!
நீ மருத்துவச்சிதான் எங்களுக்கு எப்பொழுதும் !!!
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.!!!

எழுதியவர் : பாலாஜி (7-Sep-17, 4:21 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 829

மேலே