பிளாட்பாரம்

கோணிப்பையே பஞ்சுமெத்தை,
பல்லவன் கவரி வீச
பாதசாரி வசைப்பாட்டு,
எழுந்து பல் விளக்க
எதுத்தகடை கறித்தூளு,!!
கொப்பளிச்சு வாய் கழுவ,
அடிகுழாய் உப்புத்தண்ணி!
ஆயாக்கடை நாஸ்தாவோட
பழைய துணி நானுடுத்தி,
பகலெல்லாம் வியர்வை சிந்தி
மூச்சிரைக்க வண்டியிலுக்கும்
நேரத்தில் வந்து விழுந்தது
ஒரு வார்த்தை,
எல்லாரும் இந்நாட்டு மன்னவர்,!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (7-Sep-17, 3:55 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 66

மேலே