விடியலுக்குக் காத்திருக்கும் அன்னக்கிளி அனிதாவின் உடன்பிறப்புக்கள்

அவசர அவசரமாய்
அன்னியனை வெளியேற்றி
படு பாதாள பள்ளத் தாக்கில்
சுனாமி சுழற்சியில்
சிக்கிக் கொண்டு
தத்தளிக்கின்றோம்!

மோடிக்கு ஆடி பட்டம் விடும்
பதவி பித்தர்களிடம்
அகப்பட்டு அன்னவர்கள்
கோரப்பிடியில்
இன்று ஒரு அனிதா
தூக்கு மேடை
அரியாசனம் ஏறக்கண்டோம்
இன்னு மின்னும்
எத்தனை எத்தனை
அனிதாக்கள்
காத்திருக்கும் பட்டியலில்
யாமறியேன் பராபரனே!

பொறுத்தது போதும்
பொங்கி எழு தமிழகமே!

புதிய விடியல்
புதிய வசந்தம்
புதிய தமிழகம்
இன்னும் கொஞ்ச நாளில்...

விடியலுக்குக் காத்திருக்கும் அன்னக்கிளி அனிதாவின் உடன்பிறப்புக்கள்.....

எழுதியவர் : அகமது யாசின் (7-Sep-17, 4:25 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 945

மேலே