அரசியல் எத்தர்
![](https://eluthu.com/images/loading.gif)
சரணம்:
அரசியல் வித்தகர் எத்தனை - ஐயோ
அதில்கடை சிவரை இருந்தார் எத்தனை
பல்லவி:
தரக்குறை வாய்ப்பேசிக் கெட்டாரே - சிலர்
கைத்தட்டல் வான்பிளக் கக்கதை விட்டாரே
அனுபல்லவி:
அரந்தையு டன்பேசி அளந்தார் - கண்டுடன்
மக்கள்பொய் யனென்ற வரைக் களைந்தார்
மரணம் கண்டுநான் அஞ்சிடேன் - என்றார்
மக்களின் அரணம் கண்டுடன் பஞ்சானார்
அரங்கிலே சஞ்சல மாந்தர் - பலரும்
உளரும் அரசியல் பேச்சிலே ஏமாந்தார்
கரணமி டும்தொண்டர் லாபம் - எதிலும்
காத்திருந் துபார்த்தி ருப்பர்ஐயோ பாவம்
அரசியல் அம்பலக் கொள்ளைகள் - கூண்டில்
அற்பமாய் மறைந்தது உள்ளடித் தள்ளலில்
சரணம் பாடிய எத்தரை - பலர்
சிலேடை யிட்டார் அவரோர் பத்தரை!
---ராஜப் பழம் நீ (10-Aug-2017)