முகம்

முகம்

தலைகீழாய்த் தெரிந்தாலும் தலையெழுத்து மாறாதே
வலைப்பின்னல் நிறைந்ததுவே வாழ்க்கையெனும் ஓடம்தான்
கலையுணர்வால் காணுங்கள் காட்சிகளை எம்மருங்கும்
சிலைகளுமே சிந்திக்கும் சிறப்பான முகவழகில்
மலைபோன்ற துன்பங்கள் மாறிவிடும் மதிமுகத்தால்
விலைகொடுத்து வாங்கிடவே வியன்பொருளாம் முகமுந்தான்
அலையடிக்கும் எண்ணங்கள் அகமகிழும் முகங்காண
அலைமகளும் ஆசிதனை அருள்வாளே வாழ்வினிலே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Sep-17, 9:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 96

மேலே