போராடு நண்பா போராடு

தோழன் தோழி கை சேரு…
தோன்றனும் புது வரலாறு…
துரோகிகளை தூர்வாறு…
துணிந்து நீ புறப்படு…! (1)

போராடு… நண்பா போராடு… தமிழனுக்கே இனி தமிழ்நாடு…
வீறோடு… கிளம்பு வெறியோடு… கயவர்கள் அழியனும் வேரோடு…

வந்தவரை வாழ வச்சு சந்தோஷப்பட்டோம்…
வாய்கிழிய பேசுனாங்க ஏமாந்துபுட்டோம்…
இனியும் பொறுத்திருந்தா நாம ரொம்ப மட்டம்…
இனிமேல் திருப்பியடிப்போம்… வெல்லாது உங்க திட்டம்…
(-தோழன் தோழி)

எதுவும் அறிஞ்சிடாத ஏழைங்கடா நாங்க…
இ-சேவை என்னும் பேரில் இம்சை கொடுக்குரீங்க…
எங்களோட காசுக்காக அன்றாடங்காச்சி நாங்க…
ஏடிஎம் வாசலிலே காத்துக்கிடக்குறோங்க…

போராடு… நண்பா போராடு… தமிழனுக்கே இனி தமிழ்நாடு…

நாகரீகம் என்னும் பேரில் நாட்டை கெடுத்துட்டீங்க…
நவீனமயமாக்கி பிச்சையெடுத்தோம் நாங்க…
நஞ்சை புஞ்சை எல்லாமே நாசமாச்சு போங்க…
நசுக்கி சாகடிச்சா எப்படி நாங்க தாங்க…
(-தோழன் தோழி)

குடியில் மூத்தகுடின்னு மாரை தட்டி நின்னோம்…
குனிஞ்சு பாக்கையிலே கோவணத்த காணோம்…
உள்ளே புகுந்து நம்மளை அடக்க பாக்குறாங்க…
உண்மையில் சொல்லனும்ன்னா அடிமை படுத்துறாங்க…

போராடு… நண்பா போராடு… தமிழனுக்கே இனி தமிழ்நாடு…

நீட் தேர்வு கொண்டு வரும் திட்டம் இங்க வேணாம்…
நீதிக்காக போராடுறோம் ஒடுக்க நினைக்க வேணாம்…
மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் வேணாம்…
மீறி திட்டம் போட்டா போயிடுவா காணா…
(-தோழன் தோழி)
…………………………………………………………………………………………………………………………………………………
- மணிகண்டன் தமிழன்டா

எழுதியவர் : மணிகண்டன் தமிழன்டா (8-Sep-17, 12:23 am)
பார்வை : 1952

மேலே