வேற்றுமை
கைகளுக்கும் வேற்றுமை, நாட்டிலும் வேற்றுமை.
நல்லவை கெட்டவை என்று கைகளுக்கும்,
ஜாதி மதம் என்று என் தாய் நாட்டிற்க்கும்.
கைகளுக்கு ஐந்து விரல் என்பதாலோ?
நாட்டிற்க்கு ஐந்து மதம் என்பதாலோ?
கைகளுக்கு வேற்றுமை காணும் நாம்,
நாட்டிற்க்கு காட்டாமல் இருப்போமா நாம்?
விரல் ஒன்றை வெட்டினால், உயிர் போகும் வலி
மதம் ஒன்றை வெட்டினால், உயிர் போகுவதால் வலி
கைகள் இல்லாதவனால் உயிர் வாழ முடியும்.
மதம் இல்லாமல் போனால் தான் நாடு உயிர் வாழ முடியும்.
கைகளினால் கண்ணீரை துடைத்து, ஆறுதல் பெறலாம்.
மதத்தின் நன்னூலால் மனத்திற்க்கு ஆறுதல் பெறலாம்.
கைகள் இரண்டை தட்டினால் கலகலப்பு,
மதங்கள் இரண்டை சீண்டினால் சலசலப்பு.
விரல் ஐந்தாயினும், கை ஒன்றே!
மதம் ஐந்தாயினும் நாடு ஒன்றே!