கலியுகக் காக்கை

அட்டிலில் மீந்தரெண் டிட்டிலி எடுத்து
பிட்டுவீ சமூன்று காக்கை வந்து
விட்டுவிட் ததையரு கிகொத்திய போது
சட்டென சீறிவந் தமற்றோர் காக்கை
செட்டை விரித்து துரத்திய தவற்றை
ஒற்றுமை குலைத்த காகம்
பற்றிலா கலியுக காக்கை இதுவே
---ராஜப் பழம் நீ (17-Aug-2017)