இறைவன் நமக்காக
இறைவன் நமக்காக் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
நாம்
மக்கள் பணியே
மகேசன் பணியாக
எண்ணிச் செயல்பட்டால்
இறைவன் இமைப்பொழுதும்
இமையாமல் காப்பான் !
தியானம் ஜபம் பக்தி
ஆன்மீக சாதனையுடன்
மக்கள் பணியாக
நம் செயல்பாடுகள்
நிறைவாக
இருந்து விட்டால்
நாம் இறைவனுக்காக
இறைவன் நமக்காக
இறுதிவரை
செயல்படுவான் !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை