புதிய இந்தியா

புதிய இந்தியா
??????????????????

இந்தியை கொண்டு மொழிகளை அழிப்பது தான் புதிய இந்தியா...

நிறுவனங்களுக்காக நிர்வாணமாக்குவது தான் புதிய இந்தியா...

தமிழனின் அடையாளத்தில் மண்ணை போடுவது தான் புதிய இந்தியா...

தேனை அரிதான பொருளாய் ஆக்கி விட்டு
மீத்தேனை ஓடவிடுவது தான்
புதிய இந்தியா...

கொக்கோக்கோலா வாழும்...
கூழ் சாக வேண்டும்
புதிய இந்தியாவில்...

தமிழை அழிக்க
தமிழ்நாட்டை அபகரிக்க
எங்கள் வளங்களை அழித்து...
எங்கள் மண்ணை மலடாக்கி...
எங்கள் மண்ணில் திணிப்பையும் ...சாயலையும்...அபகரிப்பையும் ஏற்படுத்தி...

எங்கள் அடையாளங்களை அழித்து
எங்கள் தமிழ்நாட்டை சுடுகாடாக்கி
எங்கள் நாகரிகங்களை திருடி
அதன் மீது புதிய இந்தியா மலருமேயானால்...

இந்தியாவின் வரைபடம் மாறும்...

* எப்பொழுது தான் இந்திய இறையாண்மையை உணர்வீர்களோ!?...
*இந்தியா என்ன ஒரு தேசமா...
ஒரு மொழி பேசும் நாடா...
ஒரு மதம் மட்டும் தான் இருக்கிறதா...

இந்தியாவின் வயது 70 தான்...

********************
உங்களுக்கு மூளை இல்லை என்றால்
வாயை வைத்துக்கொண்டு சும்மா இருங்க.
எதுங்க நல்லது திரு.திருமதி.
மோடி...டமிளிசை...ஓபி...எட..ஸ்டா...

தமிழிசை என்று உங்களை அழைக்க எனக்கு பிடிக்கலம்மா...
தமிழச்சியா பிறந்துட்டு மனசாட்சியே இல்லாம ஆட்சிக்காக எதையும் செய்வீங்க இல்ல.

நம்ம மண்ணு அழியறது தெரியலய்யா...
நம்ம மொழிய அழிக்கறது தான் தெரியலயா...தமிழக அரசியல் வியாதிகளே...
சாதி...மதம்...திராவிடம் இந்த மூன்றை தூக்கி எறிஞ்சிட்டு அரசியல் பண்ணுங்க பாப்போம்....
(மைக் கிடைச்சதுன்னு .நல்ல கேள்வி....ஆங் உங்ன்னு பேசாதீங்க.அர்த்தமா பேசுங்க.மூளை இருக்குள்ள.

உங்களுக்கு இருக்கோ இல்லையோ .எங்களுக்கு இருக்கு.நீங்க சத்தமா சொல்ற மழுப்பல பாத்தா செம சிரிப்பா இருக்கு.உங்கள பாத்தா கடுப்பா இருக்கு.)

மோடி அவர்களே உண்மையில் வளர்ச்சி எது என்று தெரியுமா....?

ஊடகங்களே நீங்கள் எப்பொழுது திருந்துவீர்கள்?

மக்களே நீங்கள் எப்ப விழிக்கப்போறீங்க?

பொறு சு.சா யாகவராயினும் நா காக்க தெரியாதா....
(வாய் இருக்குன்னெல்லாம் .பொருளே இல்லாம பேசக்கூடாது.
கேக்கற மக்கள் பைத்தியமா...
இல்ல நீயா..)...

எல்லா மொழியும் வாழ வேண்டும்...
இன்னொரு மொழியை அழிக்காமல்...

நீட் பத்தி சொல்லணும்னா.
முதல்லயே சொல்லிட்டன்.
இந்தியா ஒரு தேசம் இல்ல.அதே போல
ஒரே கல்வி இல்ல.

அவங்க சொல்றமாதிரி CBSE தான் .
அப்படி எல்லாம் இல்ல.

இந்தியால மருத்துவம்...மருத்துவமனைகள் னா அது தமிழ் தான்.
இங்க லட்சம் நோயாளிக்கு நூத்திநாப்பது வைத்தியர் இருக்காங்க.
மத்த மாநிலத்ல முப்பது பேர் தான்.

இங்கே 24 அரசு மருத்துவமனைகள் இருக்கு.
மத்த மாநிலத்லலாம் இன்னும் கல்வியறிவே முழுசா போய் சேரல.

நம்ம வரிய எடுத்து எப்படி நமக்கு தராம இருக்காங்களோ .அதே தான்.
அதிக வரிகட்றதும் நாம தான்.
இங்க இருக்க எல்லா கல்லூரியும் நம்ம வரி...
அவங்க எப்படியும் திணிக்கனும் என்பதயே குறிக்கோளா வச்சிருக்காங்க.

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Sep-17, 3:16 pm)
Tanglish : puthiya indiaa
பார்வை : 633

மேலே