நிலவும் நானும்
இரவில் ஊர்வலம் போகின்றாய் நீ....
நினைவில் ஊர்வலம் போகின்றேன் நான்...
ஆதவனின் ஒளியில் ஜொலிக்கிறாய் நீ...
ஆயிரம் கவலையிலும் சிரிக்கிறேன் நான்...
உன்னை வைத்து ஆயிரம் பாடல்கள்...
எனக்கே என்னுள் ஓர் ஊமைகீதம்....
சுற்றத்தோடு சிரிக்கின்றாய் நீ....
சுற்றம் சிரிக்க துவள்கிறேன் நான்.....
களங்கம் இருந்தாலும் களங்கிடாது நீ...
கலைந்து போன கனவுகளின் கண்ணீரோடு நான்...
என்றும் இங்கே தனிமையில் நாம்...
நுஸ்ரா அமீன்