முண்டாசுக்கவிஞனே

புரட்சிகளை கவிகளில் வடித்தாய்!
உமது உருவம் காண்கையிலே
பாதையில் நேர் கொண்டு நடக்கலானோமே!
உமது வீரக்கவிகள் படிக்கையிலே உதிரத்தை தாண்டி அணுவிலும் வீரம் பிறக்கிறதே!
உமது வரிகள் கேட்கையிலே புது உத்வேகம் கொண்டு கிளம்பினோமே!
கவிக்கு புது இலக்கணம் வகுத்தாய்.
எளிய நடையில் இயல்புகளை எடுத்துரைத்தாய்.
அஞ்சா நெஞ்சம் கொண்டு துணிவுடன் தடைகளை எதிர்கொள்ள துணிவூட்டினாய்.
விடுதலை உணர்ச்சிகளை எழுச்சி கொண்டு முழக்கமிடச்செய்தாய்.
பெண்களுக்கு உரிமை வேண்டுமென முழங்கிட்டாய்.
"சாதிகள் இல்லையடி பாப்பா " என்று ஒற்றுமைக்கு வித்திட்டாய்.
பன்மொழியில் புலமை வாய்ந்தினும் செந்தமிழே சுவையெனக்
கருதினாய்.
சொற்கள் மூலம் உண்மைகள் விளங்கிடச் செய்தாய்.
புரட்சிக் கவிஞனே!
தமிழ் தந்த கவியே!
முண்டாசு தரித்து
வீரத்தின் அடையாளமாய் மீசை கொண்டு
விழிகளில் வீரத்தை தெளிக்க விட்டு
கவிகள் பாட துடிக்கும் உதடுகள் கொண்டு
தமிழ் அன்னையின் ஆசி பெற்று கவிகள் பல புனைந்தாய்.
அரும்பெரும் மொழிக்கு நீ செய்த தொண்டு போதுமென பாதி வயதிலேயே உயிர் நீத்தாயோ ?
தமிழ்க்கவியே !
உமக்கும் உமது கவிக்கும் தலை வணங்குகிறேன் !
தமிழ்த்தாய் தந்த
வீரக்கவிஞனே!

எழுதியவர் : பிரகதி (10-Sep-17, 6:40 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 79

மேலே