குண்டூசி

குண்டூசியே!
சிறந்த அறிவாளிகளின்
அறிவு போல்
கூர்மையானது உனது முனை!
உன் தலை சிறிதானாலும்
முக்கிய கோப்புக்கள்
ஒருமுகப்படுத்தப் பயன்படுகிறாய்!
நீயோ மிக மிகச் சிறியது
ஆனால்
உன் பயன்பாடு பெரியது!
உன் சேர்க்கையால்
மயிலாக மாறி
பரிசாக உருவெடுத்தாய்!
உன் தோற்றம் பற்றி
இரகசியம் அறியும் போது
என்னில் வியப்பானாய்!
நிலத்தின் இடையில்
மண்ணோடு மண்ணாக
நீ இருந்தாய்!
உன்னை வெட்டி எடுத்தனர்
சில பேர்!
நீ பிறந்த மண்ணையும்
உன்னையும் பிரித்தனர்
சில பேர்!
இரும்பு இதயம் கொண்ட
உன்னையும் நெருப்பில் வாட்டினர்
சில பேர்!
உனக்கொரு வடிவமும்
கொடுத்து வளர்த்தனர்
சில பேர்!
நீயோ
இன்று என் கையில்!
உன் நிலையோ
இன்று வேதனையில்!
நானும் கூட
ஏதோ செய்துவிடுவேனோ என்று!

எழுதியவர் : Priyakarthikeyan (10-Sep-17, 4:01 pm)
சேர்த்தது : priyakarthikeyan
பார்வை : 63

மேலே