இனிமை

நெடுஞ்சாலை பயணத்தில்
சாரல் காற்றின் வாசத்தில்
நடை பழகும் மரங்கள் இனிமை

அழகான தோட்டத்தில்
பூக்கள் பூத்த வாசத்தில்
விளையாடும் வண்டுகள் இனிமை

பந்தங்களின் கூட்டத்தில்
அன்புகாட்டும் உறவுகளின்
செல்லமான சண்டை இனிமை

நாம் கடந்த வாழ்க்கையில்
நாம் அடைந்த மகிழ்ச்சியில்
அழகான நினைவே இனிமை

உயிர் மூச்சு வந்தவுடன்
நம்மை ஈன்ற தாயின் முகம்
முதன் முறையாய் பார்ப்பது இனிமை...........

எழுதியவர் : புவனேஸ்வரி (10-Sep-17, 3:59 pm)
Tanglish : enimai
பார்வை : 736

மேலே