எழுது கோல்

கவிஞனின் விரல் நுனியில் சொற்கள் கொண்டு விளையாடினாய்
மனதில் தோன்றிய உணர்ச்சிகளின் பிரதிபலிப்பானாய்.
எண்ணங்களின் அச்சாணியாய் திகழ்ந்தாய்.
வாழ்வின் நியதியை காவியமாய் கொடுக்கும் காவியத்திடலே,
இயற்கையை தீட்டா ஓவியமாய் தீட்டும் வர்ணக்களஞ்சியமே,
வாழ்வோடு இயற்கையை இணைத்திட்டாய்.
புரட்சிக் கருத்துகள் தூண்ட எங்களின் ஆயுதமானாய்.
கவி புனைய உதவும் கூர்ந்திடலே,
நீதி நேர்மைக்கு இலக்கணம் வகுத்திட உதவும் நியாயக்கோலே,
செழுமையான கவி புனைய உதவும் செங்கோலே,
எங்கள் சரித்திரம் அறிந்தோம் உமது எழுத்து பயணத்தால்.
பல கவிகள் தீட்டினோம் உமது மை கொண்டு,
பல உண்மைகள் அறிந்தோம் உமது கூர்மை கொண்டு ,
திரவியமாய் தேடி அழைந்த செல்வங்களை நொடிப்பொழுதில் உணர வைத்தாய்.
உம்மால் மாற்றங்கள் பல,
அறிந்தது பல,
கற்பனைகள் பல,
நிகழ்ந்தது பல,
எத்தனை எத்தனையோ மாயம் செய்தாய் எழுது கோலே
என்னவென்று கூறுவது உனது விந்தையை......

எழுதியவர் : பிரகதி (10-Sep-17, 2:48 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : ezhuthu gol
பார்வை : 141

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே