முகம் தொலைத்த முகப்புத்தகம்

உலகை உள்ளங்கைக்குள் அடைத்து விட்டதாய்
உவகை கொள்ளும் உள்ளம்.....
தொலைவுகள் நெருங்கிவிட தொலைந்தன நெருக்கங்கள்...
பேஸ்புக்கில் பேஸ் தெரியாத பேஷன் வாழ்க்கைகள்...
பெற்றவரின் அன்பை மற்றோரிடம் வேண்டும் மாயாஜாலம்...
கட்டியவன் தரவேண்டிய அன்பை காணாதவனிடம் கேட்கும் அவலம்...
தாய் சம்சுனில் தொலைக்க பிள்ளைகள் அப்பளில் தொலைந்தனர்...
மகிழ்ச்சியும் சோகமும் ஸ்டேட்டஸ்களாயின...
தாய்க்காய், தாரத்திற்காய் செலவழித்திட தருணங்கள் இல்லா இயந்திரவோட்டம்...
கனவனோடு குழந்தையோடு குடும்பத்தோடு சின்ன சின்னதாய் செதுக்கப்பட்ட சிந்தனை சிற்பங்கள் தகர்த்தெறியப்பட்டு விட்டன...
உள்ளங்களின் உன்னதங்கள் எல்லாம் உருக்குலைந்து போயின...
தனக்காக வாழும் வாழ்வை விடுத்து பிறர் காண வாழும் போலி வாழ்வின் அரங்கேற்ற மேடை...
நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து அதை இருளில் தேடும் ஓர் இழிநிலை...
கமன்ட்டில் ஆரம்பித்து காதலில் விழுந்து கை கழுவி விடும் கேவலம்...
முகத்தினை தொலைத்து முகமூடி மாட்டித் திரியும் முகப்புத்தகம் அதில்
நல்லதை நலம் நாடி வேண்டி
தீயதை தீண்டாமல் வாழ்தல் என்றும் நலமாகும்...

எழுதியவர் : நுஸ்ரா அமீன் (10-Sep-17, 8:02 pm)
பார்வை : 279

மேலே