என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 28

"விஜி.....வந்துட்டான் டி....எமன், அவன் மூஞ்சிய பாரேன், ச" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, நீ சும்மா இரு, அவன் உன்னையே தான் வாச் பண்ணுவான்" என்றாள் விஜி.

அதிசயமாக ஒன்றும் நடக்கவில்லை, அனால் ஒரு பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது, முபாரக் கூறியதை போல அன்று மதியமே அவனுக்கு அதே கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டது, இது விஜிக்கும் காயத்ரிக்கு பெருத்த இடியாய் அமைந்தது.

அன்று மாலை அனைத்து மாணவர்களையும் ஒரு சிறிய கெட் டுகெதருக்கு அழைத்தான் செந்தில். காயத்ரிக்கு விஜிக்கும் சற்றே ஸ்பெஷலான முறையில் கெட் டுகெதருக்கு வருமாறு பணித்தான்.

"ஏய், என்னடி நானே வயித்தெரிச்சல் ல இருக்கேன், இதுல இவன் கெட் டுகெதருக்கு வேற கூப்புட்றான்" என்றாள் காயத்ரி.

"எனக்கும் அந்த பயம் தான் இருக்கு டி, இன்னிக்கு நைட் அப்பா வந்துடுவார், அவருகிட்ட சொல்லி ஏதாவது பண்ண சொல்லட்டுமா" என்று கேட்டாள் விஜி.

"இல்ல டி, முபாரக் அண்ணா தான் சொல்லிருக்காரே" என்றாள் காயத்ரி.

"ஏய், அவங்க சும்மா நம்மள சமாளிக்கறதுக்கு சொல்லிருப்பாங்க டி, அவங்க இந்த விஷயத்துல எல்லாம் எப்படி இன்டெர்ப்பெயர் ஆக முடியும், அது மட்டும் இல்ல, அவங்களால என்ன பண்ண முடியும் னு நினைக்கிற, அவங்கள எல்லாம் பாத்தா சாப்டா டீல் பண்ற ஆளு மாதிரி தெரில, ஏதாவது கரடு முரடா பண்ணி இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிட போறாங்க" என்றாள் விஜி.

"எனக்கு அந்த பயமும் இருக்கு, ஆனா அன்னிக்கு முபாரக் அண்ணா நம்மள ஒரு சொந்த சிஸ்டரா பாக்கறேன் னு சொன்னதுல ஒரு உயிரோட்டம் இருந்துது டி." என்றாள் காயத்ரி.

"அப்புறம் உன் இஷ்டம், பட், இன்னிக்கு வேற ஆப்ஷன் இல்ல, நாம போய்தான் ஆகணும்" என்றாள் விஜி.

"நாம இந்த விஷயத்தை முபாரக் அண்ணன் கிட்ட சொல்லணும் இல்ல?" என்றாள் காயத்ரி.

"அது உன் இஷ்டம், இதுல ஏதோ ரிஸ்க் இருக்கற மாதிரி எனக்கு தோணுது" என்றாள் விஜி.

"இல்ல டி, கண்டிப்பா அவங்க அப்டி நம்மள ரிஸ்க் ல விடறவங்க இல்ல, நம்மள கார்ல டிராப் பண்ண சொன்னது, பஸ் ல நம்மள பாத்து வளவனூர் ல விட்டது, எல்லா விஷயத்துலயும் ஒரு டிவைன் கேர் இருக்கு டி" என்றாள் காயத்ரி.

"எனிவே, டுடே இஸ் எ ஸ்பெஷல் டே பார் யு அண்ட் ஆல்சோ மீ" என்று சலித்துக்கொண்டாள் விஜி.

மாலை, நேரத்தோடு வீடு சென்றனர் இருவரும்.

"என்ன விஜி அக்கா, ரொம்ப டல் ஆஹ் இருக்க, என்ன விஷயம்" என்றாள் ரம்யா.

"ஒண்ணும் இல்ல டி, காலேஜ் போகவே கடுப்பா இருக்கு" என்றாள் விஜி.

"ஐயோ, இப்போ எதுக்கு அழுத்துக்கற, என்ன ஆச்சு" என்றாள் ரம்யா.

"அப்புறம் சொல்றேன், அம்மா எங்க" என்றாள் விஜி.

"அம்மா கோவிலுக்கு போயிருக்கா, அப்பா ஆன் தி வெ" என்றாள் ரம்யா.

"சுத்தம், சரி விடு" என்றாள் விஜி.

"அக்கா, கேக்கறேனேன்னு தப்ப நினைக்காத, உன் முகம் ரொம்ப வாடி இருக்கு, அந்த ஒரு ஷைனிங் இல்ல, என்ன ஆச்சு" என்றாள் ரம்யா.

"இல்ல டி ரம்மி, அந்த லூசு டேவிட் இருக்கானே, அதான் அந்த மேட்ச் ல பிரவீன் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டானே, அந்த லூசு இன்னிக்கு திடீர்னு வந்து என்னை லவ் பண்றேன் னு சொல்லறான்.செம்ம காண்ட் ஆச்சு, வந்த ஆத்திரத்துக்கு பளார் பளார் னு இழுக்கனும் போல இருந்துது" என்றாள் விஜி.

"என்னக்கா, நல்ல ஆபர விட்டுட்டே" சிரித்துக்கொண்டே சொன்னாள் ரம்யா.

"ஏய், என்ன திமிரா" என்றாள் விஜி.

"நல்ல ஸ்மார்ட்டான பையன் தானக்கா அவன், நல்ல ஹைட், நல்ல பிஸிக்" என்றாள் ரம்யா.

"ரம்மி...போ...போய் போர்ட் எக்ஸாம்க்கு படி" என்றாள் விஜி.

"ம்ம், இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல" என்று சொன்னபடியே இடத்தை விட்டு அகன்றாள் ரம்யா.

"நான்சென்ஸ்" என்றபடியே மொபைலை கையில் எடுத்து ப்ரவீனுக்கும் விஜய்க்கும் முபாரக்குக்கும் ரியாஸுக்கும் "ஹை.....ஹொவ் ஆர் யு, பிஸி?" என்ற ஒரே மெசேஜை அனுப்பினாள்.

பிரவீன் "இல்லை, ஜஸ்ட் ஷிப்ட் முடிஞ்சு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்" என்று ரிப்ளை கொடுத்தான்.

"கொஞ்சம் பிஸி.....வீட்ல கெஸ்ட்" என்று விஜய்யும், "பஸ் பாடி கட்ட கரூர் போயிட்டு இருக்கேன்" என்று ரியாஸும்,"இல்ல பிஸி எல்லாம் இல்ல, சும்மா தான் டி.வீ. பாக்கறேன்" என்று முபாரக்கும் மெசேஜ் ரிப்ளை செய்தனர்.

சற்றே இவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி பழகுகிறார்கள் என்று சோதிக்க விரும்பினாள் விஜி.

"ஹாய் முபாரக் அண்ணா, இந்த பிரவீன் என்ன பண்ரான்" என்று மெசேஜ் அனுப்பினாள்.

"தெரிலயே மா, மே பி, ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருக்கணும், ஏன், மெசஜ் பண்ணிபாத்தீங்களா? ரிப்ளை கொடுக்கலயா" என்று பதில் மெசேஜ் அளித்தான் முபாரக்.

"இல்ல, ரிப்ளை ஏதும் பண்ணல, அதான், அது சரி அண்ணா, நேத்து மேட்ச் ல அந்த டேவிட் க்கு நல்லா குடுத்தான் இல்ல பிரவீன்" என்று மெசேஜ் போட்டாள் விஜி.

"ஆமாம் மா, நான் தான் சொன்னேனே, அவன் கோவத்தை அடக்கினான் நா, அது எதிரிக்கு பெரிய ஆபத்துன்னு அர்த்தம்" என்று ரிப்ளை செய்தான் முபாரக்.

"ஆனா, அவன்கிட்ட அந்த ஓவர் கான்பிடென்ஸ் ரொம்ப அதிகம் அண்ணா, அவன் தான் உங்க டீம்ல பெரிய ஆளு, மத்த எல்லாரும் சும்மா, அவன் தான் பெரிய ஸ்டார் னு அவன் நினைக்கிறான் அண்ணா" பீடிகை போட்டாள் விஜி.

"இதுல என்னம்மா சந்தேகம், திறமை இருக்குற எடத்துல திமிரும் இருக்கும் இல்ல, அவன் தான் ஸ்டார் எங்க டீம் ல, அது நாங்க எல்லாரும் ஒத்துக்குறோம்" என்று மென்மையான ரிப்ளை செய்தான் முபாரக்.

"அப்டின்னா, பிரவீன் திமிரு புடிச்சவனா அண்ணா" என்று கொக்கி போட்டாள் விஜி.

"ஐயோ, என்னம்மா, இப்டி கேக்கற, பிரவீன் சிச்சுவேஷன் கு ஏத்தமாதிரி நடந்துக்குவான், அவன் நல்ல மெச்சூர்ட் பையன் மா" என்று ரிப்ளை செய்தான் முபாரக்.

அந்நேரம் காயத்ரி விஜி வீட்டிற்கு வரவே, தான் பரிசோதித்து பார்த்துக்கொண்டிருப்பதாக நடந்துகொண்டிருக்கும் மெசேஜ்களை பற்றி சொன்னாள் விஜி.

"ஏய், என்ன டி, டிஸ்கஸ் பண்ணி பண்ணலாம் னு சொன்ன, சரி விடு சரியான கேள்விகள் தான் பொறுக்க நீ, இரு, நானும் இப்போ ப்ரவீனுக்கு மெசேஜ் போடறேன்." என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், பாத்து, மாட்டிக்க கூடாது" என்றாள் விஜி.

"என்ன நடக்குது, காயத்ரி அக்கா, விஜி அக்கா, நானும் நீங்க பேசறதை கேட்டுட்டு தான் இருந்தேன், இது தப்பு கா, அவங்க தப்பாவோ இல்லன்னா பொய்யாவோ நம்மகிட்ட பழகலக்கா" என்றாள் ரம்யா.

"ரம்மி, உனக்கு என்ன தெரியும், போ, சின்ன பொண்ணா லச்சணமா போய் படி, இது நாங்க பாத்துக்கறோம்" என்று அதட்டினாள் விஜி.

"இரு இரு, நான் அம்மா கிட்ட சொல்றேன்" என்றாள் ரம்யா.

"சொல்லு, நாங்களும் நெக்ஸ்ட் டைம் உன்ன எதுலயும் சேத்துக்காம போயிடுவோம்" என்றாள் விஜி.

"அக்கா, நீ யாருக்கு டெஸ்ட் வெக்கிறன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு கா, பிரவீன், முபாரக், விஜய் எல்லாரும் ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் அக்கா, நீங்க மெசேஜ் பண்றது அவங்க கண்டிப்பா ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க பேசிப்பாங்க, அப்புறம் என்ன நினைப்பாங்க, நல்ல யோசிச்சு பாரு" என்றாள் ரம்யா.

"அதும் டெஸ்ட் தான் ரம்மி, அவங்க ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க ஷேர் பண்ணிக்க முடியாத விஷயங்கள் இருக்கு, அதை அவங்க ஷேர் பண்ணிக்கிட்டா அது அவங்களுக்குள்ள நெகட்டிவ் ஆய்டும்" என்றாள் விஜி.

"அக்கா, நீங்க ரெண்டு பெரும் கண்டிப்பா இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் வெச்சு ஒரு நல்ல பிரெண்ட்ஷிப்பை இழக்க போறீங்க" என்றபடி கோபமாக சென்றாள் ரம்யா.

"ஏய், அது இருக்கட்டும், மணி நாலரை ஆகுது, எட்டு மணிக்கு அந்த லூசு அவனோட வீட்ல கெட் டுகெதர் கு இன்வைட் பண்ணிருக்கே, எப்படி போறது, ?" என்றாள் காயத்ரி.

"தோ, கெங்கராம்பாளையம் தான, உன்னோட ஸ்கூட்டி ல போய்டலாம்" என்றாள் விஜி.

"சரி, செவென் தேர்ட்டிக்கு கிளம்பலாம்" என்றாள் காயத்ரி.

பேசிக்கொண்டிருக்கும்போதே விஜி முபாரக்கிற்கு, "சிச்சுவேஷன் கு ஏத்தமாதிரி மாத்திக்குவான் இல்லையா, சோ, அவன் ஒரு ஆபர்ச்சுனிஸ்ட்,இல்லையா?" என்று அனுப்பி இருந்தாள்.

"விஜி, நீங்க இப்டி எல்லாம் அவனை இன்டெர்ப்ரெட் பண்றீங்கன்னு அவனுக்கு தெரிஞ்ச ரொம்ப கஷ்டப்படுவான், ப்ளீஸ், என்கிட்டே கேட்டமாதிரி அவன்கிட்ட கேட்றாதீங்க, அவன் கஷ்டப்பட்டா எனக்கு பிடிக்காது" என்று பதில் அளித்தான் முபாரக்.

"இல்ல அண்ணா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே" என்று அனுப்பினாள் விஜி.

"என்னம்மா, ஒரு விஷயம் தான், அவன் சந்தர்ப்பவாதியா மாற நான் சந்தர்ப்பம் தர மாட்டேன், அவனுக்கு என் உயிர் வேணும்னு அவன் நெனச்சாலே என் உயிர் என்னை விட்டு போய்டும் மா, ப்ளீஸ், அவன் மனசை உங்களால புரிஞ்சுக்க முடில" என்று மெசேஜ் அனுப்பினான் முபாரக்.

"நீங்க இவ்ளோ மேச்சுரடா பேசறீங்க,ஆனா அவன் அப்டி இல்ல அண்ணா, அவன் கிட்ட அந்த எக்ஸெண்ட்ரிசிட்டி இருக்கு, தான் அப்படிங்கற அஹங்காரம் இருக்கு, அவனைவிட எனக்கும் சரி காயத்ரிக்கு சரி, உங்கள தான் பிடிக்கும், என்னதான் அவன் மூலமா நீங்க பிரெண்டா ஆயிருந்தாலும் அவனை விட நீங்க எவ்ளவோ மெச்சூடான ஆளு" என்று மெசேஜ் போட்டாள் விஜி.

"அப்டியா விஜி, உங்க அண்டர்ஸ்டாண்டிங்கு தேங்க்ஸ், ஆனா ஒரு விஷயம், அவன் உங்கள என்னிக்குமே என்கிட்டே விட்டுகுடுத்து பேசினதே இல்ல, ஆரம்பத்துல நான் கூட சொல்லிருக்கேன், உங்க பிரெண்ட்ஷிப் வேணாம் னு, அதுக்கு அவன், உன்னையும் அவங்களையும் என்னால பிரிச்சு பாக்க முடில டா, நீ எனக்கு எவ்ளோ முக்கியமோ...நீ எனக்கு எப்படி உயிரோ அது மாதிரி விஜி டா...நீ உயிரை கேட்டா எப்படி குடுப்பேனோ அப்டி தான் விஜி கேட்டாலும்" அப்டின்னு சொல்லிருக்கான்" என்று ரிப்ளை அனுப்பினான் முபாரக்.

சற்று நேரம் எந்த மெசேஜும் விஜய்யிடம் இருந்து வரவில்லை.

மீண்டும் முபாரக் மெசஜ் போட்டான்,"விஜி, ஒரு சின்ன ரெக்வஸ்ட், நீங்க என்கிட்டே இப்டி பேசினதாவும் நான் இப்டி ரிப்ளை தந்ததாவும் பிரவீன் கிட்ட சொல்லவேணாம், அவன் நீங்க இப்டி பேசினதை கேட்டா ரொம்ப வருத்தப்படுவான்,அதுமாதிரி என்கிட்டே கேட்ட மாதிரி வேற யார்கிட்டயும் கேக்காதீங்க, அவங்க ரொம்ப கோச்சுக்குவாங்க, எனக்கு தெரியும் நீங்க ஜஸ்ட் எங்களை டெஸ்ட் பண்றீங்கன்னு, பட் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க, அவங்களுக்கு பிரவீனை பத்தி சொன்ன உடனே யோசிக்காம சண்டை போட்ருவாங்க," என்று மெசேஜ் போட்டான்.

விஜிக்கு இந்த மெசேஜ் அதிர்ச்சியாக இருந்தது. காயத்ரியிடம் காட்டினாள்.

"ஏய், உடனே சரண்டர் ஆயிடாத" என்றாள் காயத்ரி.

"அப்டி இல்லை, நான் எதுக்கு உங்கள டெஸ்ட் பண்ணனும், எனக்கு தோணினதை சொன்னேன் அவ்ளோதான்" என்று மெசஜ் செய்தாள் விஜி.

"அப்டியா, சரி விஜி, நான் இதை யார்கிட்டயும் சொல்லமாட்டேன், நீங்களும் ப்ளீஸ் இப்டி பேசி அவன் மனச காயப்படுத்தாதிங்க, அவன் பாவம், உங்கமேல அவ்ளோ கேர் வெச்சுருக்கான், இன்னிக்கு மார்னிங் ஷிப்டுக்கு போகும்போது கால் பண்ணிகிட்டே தான் போனான் எனக்கு, விஜி சந்தோஷமா இருக்கணும்னா காயத்ரி இந்த லெக்ச்சரர் ப்ராப்ளேம் ல இருந்து வெளில வரணும் டா, அதுக்கு ஏதாவது நாம பண்ணனும், அவங்க மேபி நாம சும்மா டைம் பாஸ் கு வாக்கு கொடுத்ததை நினைப்பாங்க, அதை நாம இல்ல ன்னு ப்ரூவ் பண்ணனும் னு சொன்னான், நீங்க அதை அப்டி தான நேனைசீங்க" என்று மெசஜ் கொடுத்தான் முபாரக்.

ஆச்சர்யமும் அதிசயமும் இருவரின் முகங்களில் தென்பட்டது.

விஜியால் பொறுக்க முடியாமல் கால் செய்தாள்.

"அண்ணா எப்படி அண்ணா நீங்க இவ்ளோ கிளியரா புரிஞ்சுக்கிட்டீங்க, சத்தியமா சொல்றேன், நீங்க சொல்ற ஒவ்வொரு பாய்ண்டும் நான்....நாங்க நெனைச்சா மாதிரியே இருக்கு, எப்படி அண்ணா நீங்க எங்க மைண்ட ரீட் பண்றீங்க" ஆச்சர்யத்தில் ஆடிப்போய் கேட்டாள் விஜி.

"விஜி, சிம்பிள், எங்க பிரெண்ட்ஷிப் யாரு என்ன சொன்னாலும் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது, அதைவிட முக்கியமானது, நீங்க எங்க க்ரூப்ல ஒருத்தரா தான் இருக்கீங்க. ப்ரவீனால கெடச்ச ஒரு பொக்கிஷம் நீங்க, உங்களால கெடச்ச ஒரு நல்ல சகோதரி காயத்ரி. இன்னும் நெறையா இருக்கு, பட் இது அதுக்கான நேரம் இல்ல, அதுக்கான பக்குவமும் உங்ககிட்ட இல்ல, " என்றான் முபாரக்.

"என்னண்ணா, சொல்லுங்க ப்ளீஸ்," என்றாள் விஜி.

"நான் உங்கள சம் க்வெஸ்டேன்ஸ் கேக்கறேன், பட்டுனு பதில் சொல்லுங்க,உங்களுக்கே எல்லாத்துக்கும் ஆன்சர் புரியும். ஆனா அது இப்போ வேணாம், நான் தொழுகை செய்ய போறேன், நைட் ஒரு நைன் ஓ க்ளாக் போன் பண்றேன்" என்றான் முபாரக்.

"அண்ணா, சொல்ல மறந்துட்டேன், நீங்க சொன்ன மாதிரியே அந்த செந்தில் எங்க காலேஜ்லயே கன்பார்ம் ஆயிட்டான், பாவம் காயத்ரி, அது மட்டும் இல்ல, அந்த டேவிட் என்கிட்டே வந்து காலைல ப்ரொபோஸ் பண்ணான், நான் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டேன்" என்றாள் விஜி.

"செந்தில் விஷயம் பைனல் ஸ்டேஜ்க்கு வந்துருச்சு, வித்தின் டு டேஸ்....முடிஞ்சுடும், ஆனா உங்க டேவிட் கதை சுவாரஸ்யமா இருக்கும் போல!!!!சரி கால் யு பாக்" என்று கூறி போனை வைத்தான் முபாரக்.

"ஏய் எப்படி டி இவ்ளோ தெளிவா அடிக்கிறாங்க, செம்ம ஆளு டி முபாரக் அண்ணா" என்றாள் காயத்ரி.

"அது இருக்கட்டும் செந்தில் மேட்டர் முடியப்போகுதுன்னு சொல்றாரு, அதான் என்னனு புரியல" என்றாள் விஜி.

"சரி டீ, அதா பாக்கலாம், நாம கிளம்பலாம்," என்றாள் காயத்ரி.

"சரி டி, அம்மா கோவில் ல தான் இருக்காங்க, போகும்போது அப்டியே சொல்லிட்டு போய்டலாம்" என்றபடி ஆடைகளை மாற்ற சட்டையின் மேல் ஹூக்கை கழற்றியபடியே பீரோவை திறந்து அழகிய நீல நிற சுடிதாரை எடுத்தாள் விஜி.

பகுதி 28 முடிந்தது.

---------------தொடரும்---------------

எழுதியவர் : ஜெயராமன் (10-Sep-17, 8:23 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 307

மேலே