பட்டணத்து ஏழை
அறையை தனிமையும்,
வயிற்றை வறுமையும் தின்கிறது..
வைராக்கியமாய் பட்டணம் வந்தவனுக்கு,
கழிவறை கட்டணம் கூட இயலாமல் போனது.
திரும்பி போக மனம் இல்லை.
இங்கிருக்க பணம் இல்லை.
பெரும் படிப்பு படித்தவன் இங்கு
தரும் வேலையை செய்கிறான்.
மிஞ்சியதை வீட்டிற்கும்,
எஞ்சியதை வயிற்றுக்கும் அனுப்புகிறான்