அன்புக்குள் அடங்குதல் பிடிக்கும்

கூட்டத்தில் ஒருவனாய்
இருப்பது பிடிக்கும்
சுதந்திரச் சிறகுடன்
பறப்பது பிடிக்கும்

வலிகளை உறவுக்காய்
தாங்குதல் பிடிக்கும்
வரம்பற்ற அன்புக்குள்
அடங்குதல் பிடிக்கும்

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (10-Sep-17, 9:09 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 120

மேலே