பயமழிக்கும் அபயமே சிவமயம்
பயமே இருள்.
பயமே மருள்.
பயமே அழிவு.
பயமே பாவம்.
பயமில்லா மனிதனைத் தேடுகிறேன் பயமிகுந்த உலகில்...
அபயம் தருமென பயத்தால் கடவுளை வேண்டிக் கொள்ள பாவம், பக்தியை பயமே ஜெயங்கொள்ள அனுதினமும் செத்து செத்து பிழைக்கிறான் இந்த மனிதன்...
சந்தோஷம் மிகுந்தவனுக்கு தன் சந்தோஷம் பறிபொய்டுமோ என்ற பயம்...
சந்தோஷம் இல்லாதவனுக்குத் தன் கவலையை நினைத்து பயம்...
ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு விதமான பயம்...
மரண வாயிலில் நுழையும் போது கூட தம் சந்ததியினரின் எதிர்காலம் குறித்த பயம்...
என்னப்பா இங்கு எல்லாம் ஒரே பயமயமாக இருக்கிறதே என்று பயத்துடன் சலித்துக் கொள்ளும் உங்களுக்கும், எனக்கும் என்றென்றும் துணையாய் சிவமயம்...
அதுவே சிந்தை தெளியும் அபயம்...
நிரந்தரம் தேடி ஓடு...
பயத்தைத் தூக்கி போடு...
இரவுக்கும், பகலுக்கும் ஏது வேறுபாடு?...
ஒற்றுமையாய் என்றும் பாடுபடு...
வேற்றுமை காணாமல் அனைவருக்கும் சம பங்கு கொடு...
அடுத்தவருடையதை நீ பறித்தால் உன்னுடையதை அடுத்தவர் பறிப்பரென்பதே இயற்கையின் ஏற்பாடு...
என்பதை உணர்ந்து பண்போடு உருவாக்கு எல்லோருக்கும் பொதுவானதொரு பண்பாடு...