கேள்வியின் நாயகனே
கேள்வியின் நாயகனே .
கவிதை by : பூ.சுப்ரமணியன் .
கேள்வி கேட்கும்
நிலையை கவனித்தால்
மனிதர்களின்
மனநிலையை
மறைக்காமல் காட்டிவிடும் !
குழந்தையின்
கேள்வி
மழலை இன்பம் அளிக்கும்
இளைஞர்கள்
கேள்வி
கேலியும் கிண்டலும் !
பெரியவர்கள்
கேள்வி
பந்தம் சொந்தம் உறவுகள்
இணைக்கும் பாலம்
முதியவர்
கேள்விகள்
அனுபவ சிந்தனைகள் !
கேள்வி கேட்காமல்
இருந்து பாருங்கள்
அனுபவமே கேள்வி
மவுனமே பதில் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை