சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே !
கவிதை by : பூ.சுப்ரமணியன்
நான்
புத்தனை நினைத்தாலும்
சித்த வேதம் படித்தாலும்
நித்தம் என் உள்ளம்
சித்தமும் கலங்குதடா !
என்
தூக்கம் கெட்டு
துக்கம் சூழ இரவில்
வாட்டும் சிந்தனைகள்
வந்து வந்து போகுதடா !
நான்
நிம்மதி கிடைக்கும்
சத்தியத்தை நினைத்து
தினம் கடைபிடித்தாலும்
துன்பம் வந்து சூழுதடா!
நான்
அல்லலை நீக்க
அறிவோடு போராடியும்
தெளிவு பிறக்காமல்
உள்ளம் கலங்குதடா !
நான்
சினம் கூடாது
நினைத்து நின்றாலும்
வாழ்வில்
சினம் வந்து
குழப்பம் உண்டாகுதடா !
கதிரவன் உதிக்க மறந்தாலும்
கடவுளை மறக்காமல்
வழிபட்டு வந்தாலும்
துன்பம் வந்து மிரட்டுதடா !
பெற்ற தாயை
பிள்ளை மறந்தாலும்
உற்ற துணை நீயென்று
துதித்து நின்றாலும்
துயரம் விலக மறுக்குதடா!
எளிமையில் வாழ்ந்து
தனிமையில் இருந்து
சிந்தித்துப் பார்த்தாலும்
சித்தமும் கலங்குதடா !
குருவைத் தேடித்தேடி
மனம்
உருக்குலைந்து
நின்ற வேளையில்
வள்ளலாரைக் கண்டு
வணங்கி மகிழ்ந்ததடா!
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை