மழையில் நனைந்த ஒற்றை ரோஜாவை

எதிர்பாராமல் தந்த
ஒற்றை முத்தத்தின் பின்

பயமா !
பட படப்பா !
வெட்கமா !

இப்படி நனைந்து
போனாய் வியர்வையில் !

அக்கணத்தில் என்னவோ

மழையில் முழுக்க
நனைந்த ஒற்றை "ரோஜாவை "
நினைவுபடுத்திவிட்டு போனாய் !

எழுதியவர் : முபா (12-Sep-17, 4:16 pm)
பார்வை : 557

மேலே