காதலித்தபோதும் , பின்னும்
காதலித்தபோது காற்றென
துரிதமாய் ஓடிய நாட்கள்
இப்போது ஆமைபோல் நகர்வதேன்
காதலித்த போது சிந்தனைகள் வேகம்
ஓடும் நாட்களோடு ஒத்துப்போனது
காதலுக்குப் பின்னே குடும்ப பாரம்
உன் கால்களை சற்றே கட்டிபோடுவதால்
நாட்கள் நகர்வதும் ஆமைபோல் ஆனதேன்
என்று ஓர் பிரமை உன்னை ஆட்டி படைப்பதாலோ !
இல்லை காதல்தான் கசந்து போனதா