கடைசிப் பார்வை

அப்பா
உன் கடைசிப் பார்வை
தொட்டிலிலிருந்து தூக்க ச்சொல்லும்
குழந்தையின் கள்ளமில்லா பார்வை
வாசல் வரை கூட
வழியனுப்ப வர இயலாத
ஏக்கப்பார்வை

உனைப்பார்ப்பேனா மறுபடியும்
எனும் கண்ணீரப் பார்வை
குழி விழுந்த கண்களுக்குள்
சோர்ந்து போன இமைகளுக்குள்
எனை முழுக்க உள்வாங்கி
இதயத்தில் இருத்தி க்கொண்ட உன்
கடைசிப் பார்வை ..
ஒவ்வொரு கணமும்
அப்பார்வையின் ஏக்கத்தில்
என் கண்கள் கசிகின்றன
உனைத்தொலைத்து விட்ட
என்னிடத்தில்
நீ விட்டு ச் சென்ற பார்வை மட்டும்
பரிதவிக்கும் இதயத்துள் .
இன்னும் பத்திரமாய் இருக்கிறது

by ,
ஏ .பி .சத்யா ஸ்வருப்

எழுதியவர் : ஏ .பி .சத்யா ஸ்வருப் (12-Sep-17, 11:13 pm)
சேர்த்தது : sathyaswaroop
பார்வை : 121

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே