நாம் ஒன்றாக வேண்டும்

என் மனம் ஒரு கம்பி...
நீ ஒரு மின்னழுத்தம்...
எப்பொழுது என் மனதில் நீ உந்துகிறாயோ,
அப்பொழுது அங்கு காதல் என்ற மின்னோட்டம் உருவாகிறது...
அந்த காதலே நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு வன்பொருள்...
நீ ஒரு மென்பொருள்...
எப்பொழுது என் மனதில் நீ பதிவேறுகிறாயோ,
அப்பொழுது நாம் காதலர்கள் என்ற சிறந்த அறிவார்ந்த ரோபோவாக உருவாகிறோம்...
நீ என்ன நினைக்கிறாயோ, அதை நான் செய்வேன்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு அலைக்காட்டி...
நீ ஒரு உள்ளீடு மின்னழுத்தம்...
எப்பொழுது என் மனதின் உள்ளீடாக நீ இருக்கிறாயோ, அப்பொழுது அங்கு காதல் என்ற அலை வடிவம் உருவாகிறது...
அந்தக் காதலே நம் வாழ்க்கையின் அளவீடாக இருக்கும்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு மின் தூண்டி...
நீ ஒரு மின்னோட்டம்...
எப்பொழுது என் மனதின் வழியாக நீ கடந்து கொண்டிருக்கிறாயோ, அப்பொழுது அங்கு காதல் என்ற காந்தப் பாய்வு உருவாகிறது...
அந்தக் காதலே மற்ற காதலர்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு வெள்ளை காகிதம்...
நீ ஒரு நீரூற்று பேனா...
எப்பொழுது என் மனதில் நீ எழுதுகிறாயோ,
அப்பொழுது காதல் என்ற கலைக்களஞ்சியத்தை நாம் உருவாக்குகிறோம்...
அந்த காதலே மறக்க முடியாத வாழ்க்கை கதையாகி மற்றவர்களுக்கு வழிகாட்டும்...

நாம் ஒன்றாக வேண்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Sep-17, 10:56 pm)
Tanglish : naam ontraga vENtum
பார்வை : 402
மேலே