உன் தோட்டத்தில் நான் பூக்கிறேன்

நீ காற்றில் எழுது
உன்னைப் புரிந்துகொள்கிறேன்
கனவில் வந்து போ
உன்னோடு
கைகோர்த்துக்கொள்கிறேன்

நிலவின் தண்ணொளியில்
நனைந்துகொள்
வெளிச்ச விரல்களால்
உன்னை
தழுவிக்கொள்கிறேன்

உன்
மூச்சின் வெப்பம்
பரவும் திசைகளில்
என் கன்னம் நீட்டி
கதகதப்புணர்கிறேன்

மனசுக்குள் என்
பெயரை உச்சரி
இமைக்கும்போதேல்லாம்
உன் விழித்திரையில் உயிர்ப்பேன்

மௌனத்தினால் ஒரு
சேதி அனுப்பு
மறுநாள்
உன் தோட்டத்தில் பூத்து
மறுமொழி சொல்கிறேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (13-Sep-17, 1:18 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 189
மேலே