முதலாளியாய் அடிமைகள்

தாய் பாடும் தாலாட்டு கேட்டு வளர்ந்த நாம் ஏதோ உலகை ஆளப்போவதாய் மனதில் கற்பனைகள் பல, கனவுகள் பல சுமந்து தேர்ச்சி பெற கற்று, பட்டங்கள் பல வாங்கி, தொழில்கள் பல கடந்து, அவமானங்கள் பல சகித்து, கூலிக்காக அடிமையாய் உழைத்து,
நிம்மதியில்லாமல் பணம், சொத்து என்று ஓடி ஓடி சேர்த்ததெல்லாம் கடைசியில் கரையுதே மருத்துவ செலவுக்கே...

ஊசி மேல ஊசி...
மருந்துக்கட்டி மேல மருந்துக்கட்டி...
இதைவிட நரகமென்ன கொடியதா?

வட்டிமேல் வட்டி போட்டு வாங்கும் வட்டிக்கடைக்காரரை போல்,
அதிலாபம் தேடி ஓடிய, ஓடும் வாழ்க்கையில் மரணமே விடியல்...

அடிப்படை உணர்வுகளை அடியோடு அழித்து ஆடம்பர உணர்வுகளைக் கொண்ட மனித வாழ்வில் அறிவார்ந்த தேடல் மடிந்து பகுத்தறிவு மண்டுகிடக்கிறது கூட்டம் கூட்டமாக...

சுயநல நோயால் தாக்கப்பட்டு ஆளுக்கொரு மாளிகை, நிலங்களென்ற போலிக் கௌரவங்களுக்குள் முதலாளியென்று வேடமிட்டு வாழ்கிறோம் உண்மையான முதலாளியானவனைக் கொள்ளையிட்டு...

முதலாளியாக வேண்டுமா?
பரந்த அண்டவெளியில் உனக்காக ஒரு நிலப்பரப்பை நீயே உருவாக்கு...
அதன் சகலத்தையும் நீயே தீர்மானி...
அதன் பிறகே நீ முதலாளி...
அதுவரை நீ ஒரு அடிமை...
நீ சுவாசிக்கும் காற்றுக்கூட உன்னுடையதல்ல...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Sep-17, 8:32 am)
பார்வை : 1407

மேலே