தேவதை

விழியே
விழிகொடு
விடை கொடு என் இதயத்தில்..
வண்ணம் பூசிய கன்னம்
கொஞ்சும் மின்மினிகள் மின்னும்...

தேவதையே
என் வாழ்வின் புது பாதை நீயே...

அதிகாலை வேளை
கைகோப்பையில்
சிறு கொஞ்சல்கள்....

குளித்து முடித்த உந்தன் மேனி சபரிசம்
நெஞ்சை கிள்ளி அள்ளும் நிமிடங்கள் ...

மலரே
புது மலரே
மலர் சூடி மயக்காதே..

பனி வெயிலில் உந்தன் ஈரக் கூந்தலால் என்னை மயக்குதம்மா....
அதை கண்ட எந்தன் மனம் செத்து பிழைக்குதம்மா.....

சிறுசிறு சண்டைகள்...
கோபம் கொள்ளும் தருணம்
மெல்லச் சிவந்த உன் முகம்...

கண்களால் கொள்கிறாய்....
என்னையும் வெல்கிறாய்.....

மெல்ல மெல்ல உன்னோடு நடக்கிறேன்
உன் நிழலோடு உறவாடி கரைகிறேன்...

வெண்பனி நீயும் ரசிக்க
பெண்பனி நானும் ரசிக்க
ஐரோப்பா ஐக்கியமானது
காதல் கூட்டுக்குள்

மெல்ல மெல்ல நகர்கிறாய் ...
என்னை ஏனடி கொள்கிறாய்.....?

நாட்காட்டி நகர்கின்றது
உன்னுள் துலைத்த என்னை தேடியே...!


நான் வரையும் கவிதையே...
இன்று கவியால் நீயோ ஆனாய்
என்


"தேவதையே"....!!!

எழுதியவர் : விக்னேஷ் (15-Sep-17, 3:24 pm)
சேர்த்தது : M Vignesh
Tanglish : thevathai
பார்வை : 322

மேலே