காதல் தீ
குறு குறு கண்ணில்
துரு துரு பார்வை நீயே...
சிறுசிறு கனவுகளில்
சிறகுகள் சுடும் தீயே....
நாளும் சந்திக்கும்
தேதித்தாள்- உந்தன்
பெயரைக் காட்டுமே!
எல்லைத் தாண்டிய
உன் இதயம் என்
கைக்கெட்டுமே!
பொய்யில்லா காதலை உன் விழி
காட்டுவேன்!
இன்பச் சிதறல்கள் கண்ணீராய் உன் கண்ணில்
உண்டாக்கி
விண் முட்டுவேன்!
புதிய உலகம் வேண்டாமே...
காண்போம்
இசையால் புது திசைகள்…
மழைகள் விழ
முகில் செய்வேன்
உன் விழிகள் அழ
தடை போடுவேன்
கனவை
விதையாய் இதயம் புதைக்கிறேன்
இமைகள் மூடும்போதும் - விண்ணில்
விண்மீன் மறைவதில்லை
காதல் இதயம் வருடும் போதும் - கண்ணில்
தீ குறைவதில்லை.....
பல நாள் இருளும்
ஒரு நாள் சுருளும்....
மருளும் மனதில்
ஒளியாய் நீயும் என் கனவே!
கனவுகள் கைகூடும் நழிகையில்
உன் விரல்கள் கைக்கூடும் வேளையில்
இருளெல்லாம் தீயுமே
" காதல் தீயில் "...!!!!!