பெண்டுலம்

கண்ணுக்குத் தெரியாத
கோடு போட்டு வைத்துள்ளீர்கள்.

துல்லியமான கோடு.
கோடு தாண்ட மறுக்கிறீர்கள்.

வெற்றுச் சமாதானங்களில்
பொய்யாய் சமாளிக்கிறீர்கள்.

பெண்டுலம் போல்
ஆடிக் கொண்டிருந்த மனம்
ஒரு கட்டத்தில்
ஒரே பக்கமாய்
முட்டுக் கொடுத்ததால்
சாய்ந்து போனது.

மனிதம் சுமையானது
கோட்டுக்கு அந்தப்பக்கம்
இறக்கி வைத்து விட்டீர்கள்.

கோடு கிழித்தீர்கள்;
உங்களைக்
கோடுகள் கிழித்தன.

எழுதியவர் : கனவுதாசன் (16-Sep-17, 11:48 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே