மூச்சு

காற்று
முயற்சியைக்
கைவிடுவதே இல்லை.

இலைகளை, கிளைகளை
அசைக்கும் காற்று
மரங்களையும்
அசைத்துப் பார்க்கிறது.

எப்போதோ அடிக்கிற காற்றில்
மரம் சாய்ந்து விடுகிறது.

வேரின் பலமின்மையா?
காற்றின் பலமா?

நூறாண்டு கடந்த
பரந்து விரிந்த
மரத்தையும்
அசைத்துச் சாய்த்துவிடுகிறது
ஒரு காற்று.

இந்தக் காற்றுத்தான்
மரத்துக்கு
உயிர் மூச்சாக
இதுவரை இருந்தது.

எழுதியவர் : கனவுதாசன் (16-Sep-17, 11:47 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : moochu
பார்வை : 62

மேலே