கல்யாண வாழ்த்து

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

எழுதியவர் : (16-Sep-17, 12:52 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kalyaana vaazthu
பார்வை : 54550

மேலே