கனவு மாளிகை
கனவு கண்டேனெடி ,
கனவினால் ஒரு அழகான ,
மாளிகை செய்தேனடி,
தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .
கவிதைகளால் உருவேற்றினேன் ,
கற்பனைகளால் அழகேற்றினேன் ,
நல்வார்த்தைகளால் சுவையேற்றினேன் .
ஆனால் தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .
வண்ணத்து பூச்சிகளால் ,
வண்ணம் தீட்டினேன்
பறவைகளால் பாட்டு இசைத்தேன் ,
ஆனால் தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .
ஒரு சிறு அலை வந்து
மோதியதும் உடைந்து
சிதறின என் கனவு மாளிகை
நிஜத்தை மறந்து கனவை
சுமப்பது மனித இயல்போ ??