தனிமையும் சுகமே
இருள் சூழ்ந்திருக்க
மொட்டை மாடியில்
நடை போடுகையில்,
தென்றலும்
சோலைகளும்
அழகிய நிலவும்,
ஜொலிக்கும் விண்மீன்களும்
போக்கியது...... என் தனிமையை!
காலை நேரம்,
விடிந்தும் விடியாமலும்
விழியில் உரசி கொண்டிருக்கும்-உறக்கமும்
என்னுள் இருக்க,
சமையலறை சமைக்க சொல்லி
போக்கியது...... என் தனிமையை!
நண்பகல் நேரம்,
நடைபயணம் சென்று,
தெருவோரம் என் கனவை முணுமுணுத்தபடி
கைகளுக்கு வேலைகொடுத்து
தட்டச்சு பயிலகம்
போக்கியது......என் தனிமையை!
எற்பாடு நேரம்,
அசதியாய் வீட்டை நெருங்க
அழுக்கு துணிகளும்
பண்ட பாத்திரங்களும்
தன்னை சுத்தம் செய்ய சொல்லி
போக்கியது.......என் தனிமையை!
மாலை நேரம்,
கொஞ்சிப்பேசும் செல்ல குழந்தைகள்
கல்வி கற்க என்னைத்தேடி வர,
மழலைகளின் சிறு குறும்புகள்
போக்கியது....என் தனிமையை!
வைகறை நேரமது,
உறங்கச்செல்ல
உறக்கம் மட்டும் ஏன்
போக்கவில்லை? என் தனிமையை!