யார் அவள்
அவள் பாதம் மிதிக்கும் சறுகுகள் மலர்களாகும்.
அவள் தேகம் நனைத்த மழைத்துளி வைரமாகும்.
அவள் விரல் கொண்டு தீண்டினால், வெறும்
குச்சிக் கூட குழல் ஆகும்.
அவள் சுவாசம் என்னும் சந்தனக் காற்று வருடினால், வாடிய மலர்களும் பூத்துக் குலுங்கும்.
அவள் கரம் பிடித்து நடக்க காற்றுக் கூட காத்திருக்கும்.
அவள் வாய் திறந்து பேசினால் குயில்கள் கூட யாசிக்கும்.
அவள் சிற்றிடை அசைத்து நடக்கையில் வண்ண மயில் வரம் கேட்கும்.
அவள் திருமுகம் பாராமல் இருக்க முடியாதென கதிரவன் மறைய மறுப்பான்.
அவள் கட்டும் சேலை நானாக வேண்டுமென நீல வானம் தவம் இருக்கும்.
அதில் சரிகை பட்டாக நான் இருக்க வேண்டுமென மின்னல் அது போட்டி போடும்.
அவள் நெற்றி பொட்டாக நான் மாற வேண்டுமென வெண்ணிலவு விம்மி அழும்.
அவள் கருங்கூந்தல் நானாக மாறிட வேண்டுமென மேகங்கள் சோகத்தில் முகம் கருக்கும்.
அதில் வண்ண மலராக எனை சூட வேண்டுமென வானவில் வாஞ்சை கொள்ளும்.
கல்லும் காதல் கொள்ளும் அந்த கட்டழகி மீது.
கம்பன் கூட தவித்திருப்பான் இவளை எப்படி வர்ணிப்பதென்று.
(யார் அந்த தேவதைன்னு யோசிக்கிறீங்களா?. இது சம்ஹாகாக எழுதினது)