குடைக்குள் மழைச்சாரல்

மழைத்தூரலில் நனைந்த உன்னை
என் மனக்குடையில்,
நிறுத்தி வைத்தேன்....

நீ நின்ற மாடியில்
நனைந்த உன் துப்பட்டாவை,
என் மனக்கண்ணில்
நிறுத்தி வைத்தேன்....

தூரல் பட்டு நனைந்ததோ,
என் இதயம்.....
இல்லை சாரல் பட்டு
சரிந்ததோ உன் பிம்பம்...

காரணம் கேட்டேன்
மழையிடம்
மழை என்னை நனை என்றது....

நனைந்து உனை பார்க்க,
ஆசை தான்!

பார்த்தால் வரும்
என் மனதில்
'காதல் தான்'

எழுதியவர் : பிரபாகரன் (17-Sep-17, 4:49 pm)
பார்வை : 194

மேலே