கல்லூரி காதல்
ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில் ,
செல்லும் வேகத்தில் மோதிக்கொண்டோம் இருவரும்,,,,
ஒரே ஒரு சாரி எனும் சொல்லுடன் விடை பெற்றோம்,,
அன்றிலிருந்து, என் தோழிகள் நீ என்னை கடந்து சென்றால்
"ஏய் உன் ஆளு போறான் பாருடி " என கிண்டலடிக்க ,
முதலில் விளையாட்டாகவும் பின்னர்தான் வெறும் விமர்சனம் மட்டும் அல்ல என்றும்
புரிந்து கொண்டேன், எனக்குள்ளே ஒரு வேதியியல் மாற்றம்,
ஏனென்று தெரியவில்லை, உன்னை கண்டால்
எங்கிருந்தோ வந்து தொற்றி கொள்ளும் நாணம்,
என்னை அறியாமல் எனக்குள் வந்துவிட்டாய் நீ!!
உன்னிடம் சொல்லவும் தயக்கம் ,
சொல்லாமல் விடக்கூடிய விஷயம் அல்ல இது,
இப்படியே நாட்கள் கழிய,
நான் செல்லும்போது ஒரே கூச்சல்,
திரும்பி பார்த்தால் நீ உன் தோழர்களுடன்,
அன்றுதான் தெரிந்துகொண்டேன்,
என் நிலையில் தான் நீயும் இருக்கிறாய் என்று,
ஒரே மகிழ்ச்சி, ஆனால் சிறு தயக்கம்,
எப்போது சொல்வாய் என்று,
காதலர் தினத்தன்று காதலை சொன்னாய்
மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன்
காதல் வாழ்வில் பயணிக்க தொடங்கினேன்,
அப்போது புரியவில்லை,
காதல் பயணம் கல்லூரி பயணம் வரைதான் என்று!!
மூன்று வருடம் நிறைவு பெற்ற நிலையில்
மூன்று முடிச்சு எப்போது போடுவாய் என கேட்டேன்
நான் ஏன் போட வேண்டும் என கேட்டாய்,
என்னை கிண்டல் செய்கிறாய் என மீண்டும் கேட்டேன்,
அப்போதுதான் அறிந்தேன் உண்மையில் என்னை பிறர்
கிண்டல் செய்ய வைத்து விட்டாய் என்று!!
மிக்க நன்றி என்னவனே !!
என்னை இதோடு விட்டதற்கு!!!
-இப்படிக்கு
கல்லூரி பயண காதலி!!!