ஒரு விவசாயின் மரணம்
வானம் பார்த்த பூமியாய் வறண்டு கிடக்கிறது என் வயல் வெளிகள்..
காய்த்த கைகளால் நிலத்தை கீறி,
உதிரம் கலந்து நீர் பாய்ச்சி,
உறக்கமிழந்து உயிர்பித்தேன்.
உணவு வித்துக்களை..
விளைவித்த பயிரெல்லாம் விலையற்று போனதால்,
வயல்வெளியிலேயே பயிர்களை அழித்து அழுது புலம்பினேன் அனாதையாய்.
மீண்டும் விதை போட்டேன்,
வானமும் பொய்த்தது
வாழ்வாதாரமும் நகைத்தது
நாடும் வீடும் வீதியில் நிறுத்தியதால்,
நாதியற்று கடன் சுமையால் கழனியிலேயே மாண்டு கிடக்கிறேன்.
அந்த மண்ணுக்கே உரமாக..
அழிந்த பயிர்களிலிருந்து ஒரு விதை முளைக்க தொடங்கி இருந்தது,
என் உயிருக்கு பகரமாய்..