வாழ்க்கை பயணம்

சன்னலில் விழும்
சாரல் மழைத்துளி
சடுகுடுவென சறுக்கி ஓடும்
இரசிக்க இரசிக்க
அழகு தான்-ஆனால் அது
பயணற்ற பயணம்.....

கடலில் கண்டொளி விளையாடும்
கண்மணி சிற்பியில்
பட்டென்று பாய்ந்து
சிதையும் மழைநீர் முத்தாய்
புன்முறுவல் செய்யும்.....
கிடைப்பது கடினம்-ஆனால் அது
மழைத்துளியின் மறுஜனனம்....

உன் வாழ்க்கை பயணம்
சறுக்கி ஓடும் மழைத்துளி அல்ல
கடலைத் தேடும் மழைத்துளி
உன்
இடம் சரியானால்
சரித்தரத்தில்
இடம் பிடிப்பாய்.....

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (17-Sep-17, 7:03 pm)
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 822

மேலே