நான் அமைதியை விரும்புகிறேன்
துயரத்தின் கோரதாண்டவம் ஒவ்வொரு நாளும் நிகழ்கையில், நான் எப்பொழுதும் துயரப்படுகிறேன்.
எப்போதும் ஒரு போர். போராட வேண்டும் எப்போதும் வாழ்க்கைக்காக...
அதில் எப்போழுதும் ஒரு துன்பம்..
ஓ! எதை நான் விரும்புகிறேன்?
நான் அமைதியை விரும்புகிறேன். என்றாலும், எனக்கு தெரியும், 'கடவுள் நம்மை வைத்து நிகழ்த்துவது ஒரு சோதனை என்று...
ஒரு நாள் சுமை அதிகமில்லை..
மறுநாள் இன்னும் அதிக சுமை.
இளமையில் காதல் வரும் நேரம், பிரிவு எப்போதும் நேரும்...
ஓ! நான் எதை விரும்புகிறேன்?
நான் அமைதிமை விரும்புகிறேன். ஆனால், நான் என்ன செய்வேன்?
மக்கள் எப்பொழுதும் சேர்ந்து வாழ்வதற்கு, தடையிடும் சாபங்களுக்குள் சிக்கி ஓலமிடுகிறார்கள்...
சத்தமிடுவதற்கு பதிலாக,
ஒருவேளை,
ஒரு பாடல் பாட முடியுமா?
நான் நம்புகிறேன்..
நான் வாழ்கிறேன் என் கனவை நனவாக்கி பார்க்க...
நான் நம்புகிறேன், நீங்கள் எல்லாரும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக அன்போடு அமைதியாக வாழ்வீர்களென்று.
இப்போது, நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்...