வானவில்லின் அழகு
புல்வெளியின் இடையினிலே புன்னகைக்கும் வானவில்லும் .
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றியதோ !
சொல்லோடு சுவையாகச் சொந்தங்கள் கூடியதோ !
மல்வித்தை வீரனவன் மல்லுவேட்டி வண்ணமதோ !
பல்சுவையாய் இனிக்கின்ற பலாச்சுளையும் போன்றதுவோ !
வில்லாளும் விந்தைதனை விண்வெளிக்குக் காட்டியதோ !
பல்லழகிச் சொல்லழகிப் பருவமகள் ஒத்தவளோ !
எல்லோரும் விரும்புகின்ற ஏழுவண்ணக் கதிர்வீச்சே !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்