கோபம்
ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில்,,
நடந்த விசயத்திற்காய்,
என்னுள் எட்டி பார்த்தது கோபம்
அடக்கி ஆள முற்பட்டேன்
முந்தி கொண்டது கோபம்,,,
உடன் இருப்பவள் என சகித்து கொண்டேன்,,
முடியவில்லை பேசிவிட்டேன்,
கோபமான வார்த்தைகளால் அல்ல,
குறையாத மௌனத்தினால்,,,,,,,