பூமியை வாழவிடு

பச்சையும்
நீளமும் கலந்த
தண்ணீர் பந்து
அழிவை நோக்கி உருண்டோடுகிறது....

ஓசோன் உடைந்து
ஆர்ட்டிக் உருகி
அண்டார்ட்டிக் பெருகி
இமயமலை மூழ்குமாம்
மிக விரைவில் நம் மரணம்....

ஆழ்கடல் பொங்கியும்
அழிவை உணர்த்துகிறது
எரிமலை வெடித்தும்
அதன் கோபத்தை காட்டுகிறது.....

மரங்களை வெட்டி
மரணத்தை தேடும் மனிதா.?..
வெட்டிய மரத்தில்
ஒட்டியுள்ளது உனக்கான உயிரும்....

வானிலை மாற்றம்
வானிலை அறிக்கையையே மாற்றுகிறது நித்தம்...

வெயில் காற்றில்
விதையாக முடியவில்லை
இலவம் பஞ்சு இனம் கூட
இடம் தெரியாம போயிருச்சே.....

அலைபேசி
அழைப்பு மணி சத்தம்
அதிகமாகி போனதால்
சிட்டு குருவி சத்தம் ஏனோ
அரிதாகி போச்சு......

அழிந்து வரும்
அறிய வகை உயிரினங்கள் பட்டியலில்
மனித இனம் முதலிடத்தில் மிக விரைவில்....

பருவ நிலை மாறிபோச்சு
கோடையில் குளிர் வாட்டுது
குடை பிடித்து வெயிலில்
நடக்கவேண்டியதுள்ளது மழை காலத்தில்....

இது தொடர்ந்தால்.....

மாலை வெயில்
மரத்தடி நிழல்
குல கரை
குளிக்காத தாமரை இலை
ரசிக்க முடியாது உன்னால்

ஏரி தண்ணீரில்
தத்தளிக்கும் தவளை
முகம் பார்க்கும் மேகம்
நடை பயிலும் நாரை
இனி பார்க்க முடியாது உன்னால்....

மருந்து தெளித்த வெயிலில்
வண்ணத்துபூச்சியின் மரணம் உணர்த்துகிறது
இயற்கையின் அழிவை....

நீ உணரவில்லையா.?..

ஆள் குழாய் தோண்டியது போதும்
அரைஅடி குழி தோண்டி மரங்களை நடு....

பிளாஸ்டிக்கை புதைத்தது போதும்
இனியாவது சில மர விதைகளை புதை....

கழிவு நீரை தேக்கி வைக்காதே
சாக்கடை நீர் பாய்ச்சி
சந்தன மரங்களை உருவாக்கு....

நாளையும் விடியல்
காண வேண்டும் பூமி
நம் சத்ததியினர் உயிர் வாழ....

எழுதியவர் : பாலமுதன் ஆ (25-Jul-11, 9:29 am)
பார்வை : 623

மேலே