அனிதா-சென்றுவா என் தங்கையே

அன்னையின் கதகதப்பில் நீ
கருவறையிலேயே இருந்திருக்கலாம்

வெளியில் வந்து விழுந்து இந்த சுயநலமிக்க
உலகை வேடிக்கை பார்ப்பவர்களோடு சேர்ந்து
வேடிக்கை பார்க்கும் சிலரில் இணைய மறுத்து
தனித்து நின்று உன்னுடைய ஆதகங்களை
வெளியே கொட்ட முடியாமல் உன்னுளே
அழுத்திக்கொண்டு புறப்பட்ட இடம் மறந்து
துயில் கொள்ள சென்றுவிட்டாய்

உன்னோடு சேர்த்து உன் கனவையும் தீ
மூட்டி சென்றுவிட்டது இந்த சுயநலமிக்க உலகம்

சென்று வா தங்கையே
இன்னொரு பிறவியிலாவது ஆசை இன்றி வாழ கற்றுக்கொள் :(

எழுதியவர் : ஷோபனா (18-Sep-17, 9:13 pm)
சேர்த்தது : Shobana
பார்வை : 207

மேலே