அம்மா என்ற மந்திரச்சொல்

'மம்மி,மம்மி என்று அழைத்து
பழகிய என் நாக்கு -ஏனோதெரியவில்லை
'அம்மா', 'அம்மா' என்று கூவி அழைத்தது;
இன்றுதான் நான் முதல் முதலாய் -என்
தாயின் அன்பில்,,ஒரு தனிப்பெரும் அன்பை
கண்டு அனுபவித்தேன் ,குழந்தையாய் ஓர் மகனாய்
புரிந்தது இப்போது ,அந்த 'அம்மா' என்று நான்
என்னையும் அறியாமல் அழைத்த அந்த
நாலெழுத்து மந்திரத்தின் மகத்துவம் அது
என்று -தாய்க்கு தமிழ் மந்திரம் அது .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-17, 9:20 pm)
பார்வை : 97

மேலே