உணர்வுகள் மீட்டும் ராகங்கள்
அடிக்கடி மாறும் உள்ளம்
நினைத்ததை பெறுவதில்லை !
அடித்தாலும் சிரிக்கும் இதழ்கள்
அனைவர்க்கும் வாய்ப்பதில்லை !
நம்பிக்கை வேரை வெட்டும்
நடிப்புகள் நியாயமில்லை !
நெஞ்சுக்குள் தீயை வைத்து
உறங்குதல் ஆவதில்லை !
தன்னையே ஏய்த்துக்கொள்ளும்
தவிப்புகள் இலாபமில்லை !
உண்மையைப் பள்ளம் தோண்டி
புதைப்பதில் இன்பம் இல்லை !
கனவுகள் காணும் கண்ணை
கோபித்துப் பயன்கள் இல்லை !
உணர்வுகள் மீட்டும் ராகம்
ஓருபோதும் ஓய்வதில்லை !
@இளவெண்மணியன்