பாவத்தின் சம்பளம் மரணமல்ல
குற்றங்கள் பல
புரிந்தால், தண்டனை!!
வீட்டில் நடக்கும் சிறு
தகராறுக்கும் தண்டனை!!
கோபத்தில் விழுந்த வார்த்தைகளுக்கும்,
விழாத வார்த்தைகளுக்கும் சேர்த்தே தண்டனை!!
கடுகளவேனும் குற்றம்
இருந்தால் உடனே தண்டனை!!
செய்யாத குற்றங்களுக்கும்
சேர்த்தே தண்டனை!!
தண்டனைக்கு மேல் தண்டனை
வழங்கியும் திருந்தாத இந்த
பொழுது நமக்கு புரிய வைக்கிறது
பாவத்தின் சம்பளம் மரணமல்ல !!
மன்னிப்பும், மௌனமான தனிமையும் என்று!!!!