காதலின் கனவுகள்

என்னவனே,
உன் விரல்கள் பிடித்து அக்னிதேவதையை வலம்வரும் அந்த நொடிகளை எண்ணி பலநாட்கள் கனவோடு காத்திருக்கிறேன்,
கனவுகள் எல்லாம் உயிர்பெற்று எழுந்திடுமா என் கணவனாய் உன் கரங்களில் மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டு மணமேடை ஏறும் வாய்ப்பு,... ஏங்காத நொடிகளில்லை எழுதாத வரிகளில்லை உன்னை எண்ணாமல் தூக்கமில்லை .... இரு விழிகளும் கலங்குதடா இனியவனே உன்னை நினைக்கையிலே, கரங்கள் கூப்பி வேண்டுகிறேன் கண்ணெதிரில் தென்பட்டால் போதும் என்று..... "காத்திருப்பேன் காலமுள்ளவரை கரம் பிடிப்பேன் கண்ணில் கனவு உள்ளவரை மறவாது உயிர்த்தெழுவேன் மண்ணில் உயிர் புதையும்வரை" ....... என்றும் நினைவுகளுடன் உன் உயிர் நிஷா......

எழுதியவர் : நிஷா (19-Sep-17, 1:13 pm)
Tanglish : kathalin kanavugal
பார்வை : 371

மேலே